முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் மஹிந்த தேசப்பிரிய!
இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த சனிக்கிழமை (09-07-2022) கொழும்பில் இடம்பெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன (Mahinda Yapa Abeywardena) நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபயவை உடனடியாக பதவி விலகுமாறும் அதுவரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் ‘காலி கிரிக்கெட் போட்டியில் வெற்றி Galleumuwadora முடிவு நிலுவையில் உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.
