கொழும்பில் கோர விபத்தில் சிக்கிய வாகனங்கள்... ஒருவர் உயிரிழப்பு!
மஹரகம - பமுன்வ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் 30-11-2024 இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து பமுன்வ நோக்கிச் சென்ற உந்துருளி ஒன்றும், ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, 2 மகிழுந்துகள் முன்னால் வந்த உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.