மதுரோ கைது தொடர்பிலான பின்னணி என்ன? ட்ரம்ப் அரசியலில் புதிய திருப்பம்!
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவில் போதைப்பொருள் வியாபாரம் தலைத்தோங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதைப்பொருள் கடத்தலை காரணமாக காட்டியே, மதுரோவை பதவி விலகுமாறு ட்ரம்ப் நீண்ட காலமாக எச்சரித்து வந்ததாகவும், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெனிசுவேலாவின் வளமான எண்ணெய் வளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா அந்த நாட்டை கைப்பற்ற முயல்கின்றதா? என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை முன்வைத்து பேசிவந்த ட்ரம்ப், தற்போது எண்ணெய் விவகாரத்தை அதிகமாக முன்வைத்து பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், மதுரோவுக்கு எதிரான நடவடிக்கைகளின் உண்மையான காரணம் போதைப்பொருளா அல்லது எண்ணெய் அரசியலா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
மேலும், வெனிசுவேலா மட்டுமன்றி, லத்தின் அமெரிக்க நாடுகள், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மீதும் ட்ரம்ப் வைத்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள், ஒரு விரிவான புவியியல் அரசியல் (Geopolitics) திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....