முக ஸ்டாலின் எதிர்பார்ப்பில் மண்னை அள்ளிப்போட்ட நீதிபதிகள்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக நீதிமன்றில் முக ஸ்டாலின் தொடந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தொகுதியில் அவருக்கு எதிராக தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு என்பவர் போட்டியிட்டார்.

கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி
ஆனால் கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். தவெக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது நிறைய முறைகேடு நடைபெற்றதாகவும், வாக்கு எந்திரத்தில் குளறுபடி இருந்ததால் இரண்டாம் இடத்தில் உள்ள தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அதில் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது முக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல’ என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.