முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் செய்யாது; சுரேன் ராகவன்
முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திர கட்சியின் 75 ஆவது நிறைவை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சுதந்திர கட்சி தமிழுக்கும் தமிழர்களுக்குமான கனவுகளை சுமந்த கட்சியாகும். ஆம், நாங்கள் வரலாற்று ரீதியிலான தவறிழைத்தோம். ஆனால் அது மன்னிக்க கூடியது.
குற்றம் செய்யாத ஒரு கட்சி இல்லை. காந்தியடிகள் கூட குற்றம் இழைத்தார். இலங்கை சுதந்திர கட்சி இழைத்த தவறுக்கு தமிழன் என்ற வகையில் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.