தூசு தட்டப்படும் மிக் விமான கொள்வனவு; கிலியில் ராஜபக்சர்கள்!
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகின்றதாக கூறப்படும் நிலையில் ராஜபக்சர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் வகையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் நோக்கம்
ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்டவர்கள் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.