மன்னாரில் மாகாண அதிகாரங்களை மத்திய அரசிடம் அடகு வைக்கும் அவல நிலை
மடுப் பகுதியில் உள்ள காணி விவகாரம் தொடர்பில் மாகாண அதிகாரங்களை மத்திய அரசிடம் அடகு வைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டினை கோயில்மோட்டை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்., கடந்த ஒரு வருடமாக கோயில்மோட்டை காணியை எங்களுக்கு வழங்குமாறு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் விவசாயம் மேற்கொண்டுவரும் பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு ஏழை கிறிஸ்தவ விவசாயிகள் போராடிவந்த நிலையில், தங்களுக்கு வழங்குமாறு மடு பகுதி தேவாலய குழுவினர் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தின் பின்னர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் குறித்த வயல்காணி விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மடு பிரதேச செயலாளருக்கு விவசாயிகளுக்கு காணிகளை பிரித்தளிக்க உத்தரவிட்டிருந்த போதும் குறித்த காணியை விவசாயிகளுக்கு பிரித்தளிக்காமல் அங்குள்ளவர்களிற்கு சாதகமாக செயற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து கோயில்மோட்டை காணி பிரச்சனையை தங்களின் சுய கௌரவ பிரச்சினையாக கருதிக்கொண்டு எப்படியாவது கோயில்மோட்டை காணியை அடைந்தே ஆக வேண்டுமென குறுக்குவழிகளில் பல நடவடிக்கைளை முன்னெடுத்து வந்தனர்.
ஆனால் இப்போது அவர்கள் முன்னெடுத்துள்ள செயற்பாடானது தங்களின் சுய கௌரவத்திற்காக தமிழ் தேசியத்தையும், வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கும் சொற்ப சலுகைகளையும் குறைக்கும் விதமாக இருக்கின்றது என குற்றம் சாட்டும் விவசாயிகள், மடு பிரதேச செயலத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தினையும் ஆதாரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த கடிதம் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு எழுதப்பட்டுள்ளது, அதில் கோவில் மோட்டை வயல் காணி தொடர்பான பிரச்சினைக்கு விரைவாக தீர்வு பெற்று தருமாறு தொடர்பான கோரிக்கை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மேற் கண்ட விடயம் தொடர்பாக மடு பரிபாலகர் அவர்களின் மூலமாக கூற வருவது 2021.06.01 கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி 2021 ஜனவரி 20ஆம் திகதி காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் செய்யப்பட்ட முடிவின் படி இந்த இடத்தை மடு தேவாலயத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைக்கான பரிந்துரைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன் என எழுதப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த கடிதத்தில் 2021 ஜனவரி 20ஆம் திகதி உமது காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் செய்யப்பட்ட முடிவின் படி இந்த இடத்தை தேவாலயத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைக்கான பரிந்துரைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன் என எழுதப்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாகத்தான் அவர்களின் இந்த கடிதத்தை பார்க்க வேண்டும், உண்மையில் வடக்கில் தற்போது பதவி வகிக்கும் ஆளுநர்கூட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவதான், அவவோடு ஏன் இவர்கள் பேசவில்லை என்பதை கொஞ்சம் அனைவரும் ஜோசித்து பார்த்தாலே இவர்களின் கபடங்கள் விளங்கும்.
கோயில் மோட்டை காணி பிரச்சினைகளை தாண்டி இவ்வாறு வடக்கு மாகாணத்தில் காணியானையாளர், இருக்கும்போது தங்களுக்கு சாதகமாக பெறுவதற்காக அரசாங்கத்திடனும், அரச அதிகாரிகளுடனும் இணைத்து செயற்பட்டு வடக்கிலிருக்கின்ற சொற்ப அதிகாரங்களுக்குள்ளும் மத்திய அரசை உட்புகுத்துகின்ற தமிழ் இனத்திற்கெதிரான செயற்பாடாகவே இதை நாம் பார்க்கின்றோம்.
இதன் முதற்கட்டமாகவே தேவாலயத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் சிங்கள மொழி முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உங்கள் சுயநலன்களுக்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழ் தேசியத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாட்டை தேவாலய பரிபாலகர் உட்பட்ட குழுவினர் கைவிட வேண்டுமெனவும் கோயில்மோட்டை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.