மாவீரர் நினைவேந்தல்: கிழக்குப் பல்கலைக்குள் அத்து மீறி மாணவர்களை மிரட்டிய பொலிஸார்!
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வின் போது, கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் இலங்கை பொலிஸ் அத்து மீறல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,
இன்றையதினம் (27-11-2023) மாலை கிழக்குப் பல்கலைக்கழக பொங்கு தமிழ்த் தூபி அருகில் அமைதியான முறையில் இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கு கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிஸ் அறுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், பல்கலைக் கழகத்தினுள் அத்து மீறி மாணவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என்று மிரட்டி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பின் கால் பாதனிகளுடன் நாம் புனிதமாக வழிபடும் இடத்தில் மிதித்து நினைவுச்சின்னம் ஒன்றை கழற்றிச் சென்றார்கள்.
இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை தாண்டி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் உறவுகளை நினைவு கூறும் முகமாக தீபங்கள் ஏற்றி, ஆகாய தீ பந்தம் என்பன ஒளி அனுப்பப் பட்டு மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.