தமிழர் திருநாளாம் தை திருநாள் ; பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன தெரிஞ்சுக்கோங்க!
பிறந்தது தைப்பொங்கல்.இன்றைய தினம் தைத்திருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சூரியனின் ஆதிக்கம் நிறைந்த 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடபடுகின்றது. இந்த தை திருநாள் முதல் சூரியனின் வட திசை பயணம் ஆரம்பமாகிறது.

தை திருநாள் பண்டிகை
பயிர்களின் விளைச்சலுக்கு உதவும் சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவும் தை திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை நாளில் மக்கள் வீடு, வாசல்களை சுத்தம் செய்து மாவினால் கோலமிட்டு தோரணங்கள் கட்டி, கணுப்பிள்ளை எனப்படும் காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை வரவேற்பார்கள்
தை திருநாளன்று வீட்டு வாசலில் அழகிய வண்ண கோலமிட்டு புது அடுப்பும், புது பானையும் வைத்து பொங்கல் வைத்து, காய்கறிகள், கரும்புகள் வைத்து சூரிய தேவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுத்தொழுவங்களை சுத்தம் செய்து பொங்கல் வைத்து உழவர்களின் நண்பர்களான கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்: தை பொங்கல்: ஜனவரி 15, 2026 (வியாழக்கிழமை) அதிகாலையிலேயே பொங்கல் வைக்க விரும்புபவர்கள் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:30 - 6:00 மணிக்குள் பானை வைத்து, சூரிய உதயத்தின் போது பொங்கல் பொங்கி வருமாறு பொங்கல் வைக்கலாம். பொங்கல் பொங்கி வரும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி வணங்கலாம்.
இல்லாவிட்டால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை - காலை 10.30 மணி முதல் 11 மணி வரை - பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை வணங்கலாம்.