எலும்பும் தோலுமாக மாறிய நடிகர் ஸ்ரீ ; குடும்பத்தினர் கோரிக்கை
நடிகர் ஸ்ரீ பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதோடு நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் , இருகப்பற்று எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் உடல் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் அவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான இவருடைய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அவருடைய குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.