ஹெல்மட்டை கழட்டாத அரச அதிகாரி; மக்களிடம் வசூல் வேட்டை !
டிட்வா புயலை பயன்படுத்தி , பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபிரதேசத்தில், அரச அதிகாரி என கூறி மோட்டார் சைக்கிளில் வரும் நபர் ட்நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
கறுப்பு நிறமுழுக்காட்சட்டையையும் வெள்ளை நிற சேட்டையும் அணிந்து தன்னை ஓர் அதிகாரி போல காண்பித்துக் கொண்ட ஒருவர், நுவரெலியா பிரதேச செயலகத்தில் பணி புரிவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுநிதி சேகரித்து வருகிறார்.

அரச அதிகாரி என கூறி வசூல் வேட்டை
மோட்டார் சைக்கிளில் தனியாக வந்திருக்கும் அந்த கில்லாடி,பொகவந்தலாவ, கெர்கஸ்வோல்ட் பிரிவுகளில் உள்ள தோட்டங்களில், பணத்தை வசூலித்ததாகவும்,எந்தவொரு இடத்திலும் ஹெல்மட்டை அவர் கழற்றவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மக்களில் சிலர் தங்களுக்கு இயன்ற நிதியுதவியை செய்துள்ளபோதும் ஒரு சிலர் மறுத்துவிட்டனர்.
அதேவேளை , குறித்த நபர் மிக விரைவாக நிதியை பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.