20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு பேரூந்து ; பத்துப் பேர் காயம்
புத்தளம் அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்துப் பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேரூந்து வெள்ளிக்கிழமை முன்னிரவில் புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட மீ ஓயா பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
கடும் மழை காரணமாக பாதையில் வழுக்குப்பட்டு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் பேரூந்து மீ ஓயா பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இதன் போது பேரூந்தினுள் 27 பயணிகள் இருந்த நிலையில் அவர்களில் பத்துப் பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.