மார்ச் மாதத்தில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்; யார் யார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் இயக்கங்களில் மாற்றம் காணப்படும். மாத தொடக்கத்தில், புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரியன் மற்றும் சுக்கிரனின் நிலையிலும் மாற்றம் ஏற்படும்.
இது தவிர அஸ்தமன நிலையில் உள்ள சனிபகவான் மார்ச் மாதத்தில் உதயமாக உள்ளார். இந்நிலையில் சனி மற்றும் பிற கிரகங்களின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றங்கள் சாதகமானதாக இருக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றி அதிகரிக்கும். அந்த வகையில் மார்ச் மாதம் அதிஸ்டம் பெறும் ராசிகளாவன,
அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உறவுகள் மேம்படும். உடல்நிலை மேன்மை அடையும். நிதிநிலை நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்
துலாம்
துலா ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். பல புதிய வேலைகளை செய்வீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். முழுமையாக முயற்சித்தால் அதிகப்படியான நன்மைகளை பெறலாம்.
விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் படைப்பாற்றல் மிகவும் வித்தியாசமாகவும் திறன் படைத்ததாகவும் இருக்கும். இதனால் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மனதில் தோன்றும் விஷயங்களை இந்த மாதம் செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் பல பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களை பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு
கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நிதி ரீதியாக வலுவாக இருக்கும். இந்த மாதம் உங்கள் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. அனைத்து பணிகளிலும் லாபம் அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.