லங்கா பிரீமியர் லீக்கில் Galle Gladiators அணியை வெளியேற்றிய Colombo Stars
லங்கா பிரீமியர் லீக்கில் கிரிக்கெட் போட்டித் தொடரின் Playoff போட்டியில் Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
மேலும் இந்த போட்டி மழை காரணமாக 18 ஓவர்களாக மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.
எனவே Colombo Stars அணிக்கு 109 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.
இதனடிப்படையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் Colombo Stars அணி வெற்றி பெற்றுள்ளதுடன் Galle Gladiators அணி லங்கா பிரீமியர் லீக்கில் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.