குறைந்தது தங்கம் விலை..... நகை பிரியர்கள் மகிழ்ச்சி
சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.
ஏப்ரல் மாத கடைசியில் அட்சய திருதியை நாள் கொண்டாட்டப்பட்டதால் கடந்த 2 நாட்களும் தங்கம் விலை குறைந்தது. இந்நிலையில் மே மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் (30.04.2025) அட்சய திருதியை அன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (01.05.2025) தங்கம் விலை தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775க்கும் சவரனுக்கு ரூ.1640 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. அதன் படி இன்று (02.05.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,240க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ. 57,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.