குறைந்தது தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆகஸ்டு மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நகைவாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா என்கிற மனநிலையில் இருந்து வந்தனர்.
சென்னையில் நேற்று ஆகஸ்ட் 22ஆம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், இன்றும் சற்று குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 23ஆம் திகதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660க்கும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்து ஒரு கிராம் ரூ.5456க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.43648க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேபோல வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 91.70க்கும் ஒரு கிலோ ரூ.91,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.