குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து ; பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்
கொழும்பு பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதியான குப்பை மேட்டில் இன்று (10) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மொரட்டுவை தீயணைப்புப் பிரிவு, இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளியாகும் புகையானது நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும் என்பதால், குப்பை மேட்டைச் சூழவுள்ள உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அந்தப் பகுதியைக் தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் புகையை சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, முகக்கவசம் (Mask) அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.