லொறி - பாடசாலை வேன் விபத்து ; மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், லொறியில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (7) பிற்பகல் இடம்பெற்றது. நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியிலிருந்து டெஸ்போட் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனுடன் நானுஓயா பிரதான நகரில் இருந்து எதிர்த்திசையில் பயணித்த லொறி மோதியது.

மேலதிக விசாரணை
விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவரும் பெற்றோரில் ஒருவரும் என 3 பேர் காயமடைந்த நிலையில் நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.