2022-ல் வரும் சனிப்பெயர்ச்சியால் இவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறும்!
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சனி பகவான் தனது சொந்த ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, புத்தாண்டில் சனி பகவானின் ராசி பரிவர்த்தனையின் காரணமாக, சில ராசிக்காரர்களின் நல்ல பலம் பல மடங்கு அதிகரிகும்.
இதேவேளை, சனி பகவான் மொத்த 4 லக்ன ஜாதகக்காரர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். 2022 ஆம் ஆண்டில் (New Year) வரும் சனிப்பெயர்ச்சி இந்த லக்ன ஜாதகக்காரர்களை எப்படி பாதிக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷப லக்னம்: ரிஷபம் லக்னம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு 2022 மிகவும் சாதகமாக இருக்கும். மகர ராசியில் சனி பகவான் பிரவேசம் செய்வது நல்ல பலன்களைத் தரும். புத்தாண்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் தந்தையின் ஆதரவும் கிடைக்கும். பலம், கௌரவம், புகழ் ஆகியவை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் ஆதாயம் அடைவார்கள். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.
மிதுன லக்னம்: மிதுன லக்னம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு சனி பகவான் கலவையான பலன்களைத் தரப்போகிறார். குடும்பத்தில் அழுத்தமான சூழல் இருக்கும். இதேவேளை, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காது. கால், வயிறு சம்பந்தமான நோய்கள் தொல்லை தரும். குழந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
கடக லக்னம்: மிதுன லக்னம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஏழாவது மற்றும் எட்டாவது வீட்டிற்கானவராக சனி பகவான் இடம் பெயர்வார். இதனால் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். மேலும், புதிய தொழில் தொடங்குவது நன்மை தரும். இருப்பினும், மனநல பிரச்சினைகளால் சிக்கல்கள் வரலாம்.
புத்தாண்டு பண லாபத்திற்கு சாதகமாக இருக்கும். சனிப் பெயர்ச்சியால் தந்தைக்கு சிரமம் ஏற்படலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இது தவிர தாயாரின் உடல்நிலையில் அக்கறை தேவை. வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்வரும் 2022 புத்தாண்டில் வாகனம், நிலம் வாங்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.