மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!
நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று காலை நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தேகமவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று காலை 8 மணியளவில் வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை ஆரம்பித்ததுடன், அது திறக்கப் படுவதற்கு முன்னரே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை , காலி, தெவட்டா பகுதியிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் முதல் எரிபொருள் தீர்ந்து விட்டது.
அத்துடன் காலிப் பகுதியிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை எரிபொருளைப் பெற்றுக்கொண்டன. அதே நேரம் மின்னேரியாவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஓட்டோ டீசல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் , இன்று காலை முதல் ஹிங்குராங் கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அதேசமயம் கடந்த சில மாதங்களின் முன்னரும் எரிபொருளுக்காக மக்கள் எரிபொருளுக்காக நீண்டவரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.