பேண்ட் அணியாமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்த லண்டன் மக்கள்! இப்படி ஒரு காரணமா?
லண்டனில் 'நோ ட்ரவ்சர்ஸ் டே' கொண்டாடுவதற்காக மக்கள் அனைவரும் கால்சட்டை ஏதும் அணியாமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள எலிசபெத் லைட் மெட்ரோ வழித்தடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-01-2023) பயணித்த அனைத்து பயணிகளும் கால்சட்டை அணியாமல் இருந்தனர். எவ்விதமான சங்கடமும் இல்லாமல் மேலாடையை மட்டும் உடுத்தியபடி வலம் வந்தனர்.
லண்டன் மக்கள் கால்சட்டை அணியாமல் என் இப்படி உலா வருகிறார்கள் தெரியுமா?
அந்த நாட்டில் இப்படி கால்சட்டை அணியாமல் சுற்றுவது பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்று! ஆண்டுதோறும் ஒருநாள் ‘நோ ட்ரவ்சர்ஸ் டே’ என்ற பெயரில் கால்சட்டை அணியாமல் இருப்பார்கள்.
இந்த நாளை லண்டனில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், கொரோனா தொற்று பரவியதால் 2020ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்த இந்தக் கொண்டாட்டம் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
லண்டனில் 10வது ஆண்டாக ‘நோ ட்ரவ்சர்ஸ் டே’ கொண்டாடி இருக்கிறார்கள். இதில் கலந்துகொள்பவர்கள் கால்சட்டை எதுவும் அணியாமல் வரவேண்டும்.
மற்றவர்களை நேருக்கு நேராக முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும். இந்த இரண்டே நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்பவர்கள் இதில் பங்கேற்கலாம்! முதல் முதலில் 2002ஆம் ஆண்டு அமெரிக்காவில்தான் இது ஆரம்பித்துள்ளது.
அப்போது 7 பேர் மட்டும் மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒருவர் வீதம் பேண்ட் அணியாமல் ஏறியிருக்கிறார்கள். அவர்கள் வேடிக்கையாகத் தொடங்கியது இப்போது பல நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது.