நாடாளுமன்றம் செல்லும் சகல வழிகளுக்கும் பூட்டு!
நாடாளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் (06) பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.