ஸ்ரீதரனுக்கோ சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது!
நடைபெறவுள்ள இலங்கை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமது மக்கள் வாக்களிக்குமாயின் அது தாமே தமக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நான் பாராளுமன்றுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கு அனுபவம் குறைவு. சென்றதன் பின்னர் தான் தேசிய மக்கள் சக்தி (NPP) இனது நிலைப்பாடு தெரிந்தது.
எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும்
அதற்கு இந்த தேர்தலில் வாக்களிக்குமாயின் நாம் எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும். யாழ் மாகாண சபை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அது பிரச்சியினையில்லை.
யாழில் மட்டும் எமது வாக்காளர்கள் கஜேந்திர பொன்னம்பலத்தினுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறும் அருச்சுனா எம்பி கூறினார்.
மேலும் கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணாவுடன் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் ஸ்ரீதரனுக்கோ, அல்லது சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது என்பது எனது தெளிவான வேண்டுகோள் எனவும் அருச்சுனா எம்பி இதன்போது தெரிவித்துள்ளார்.