நாளாந்தம் கோடிக்கணக்கில் வருமானத்தை இழந்த மதுவரித் திணைக்களம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையால் இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கு நாளாந்தம் 10 முதல் 15 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து வசதியின்மையே இதற்கான பிரதான ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரத் தடை, பணியாளர்களுக்கு போக்குவரத்து செய்ய முடியாமை, விலை அதிகரிப்பு, நுகர்வு குறைவடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் சுங்கத் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் என்பனவற்றுக்கு அடுத்தபடியாக இலங்கையில் அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம் கொண்டு வரும் நிறுவனமாக மதுவரித் திணைக்களம் காணப்படுகின்றது.