அக்கரைப்பற்றில் மின்னல் தாக்கி பலத்த தேசங்கள்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று (28) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடனான காலநிலை நிலவியது. இதன்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள சில வீடுகளில் பலத்த தேசங்கள் ஏற்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆறாம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் உள்ள சில வீடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்னை மரமொன்றினை தாக்கிய மின்னல் காரணமாக தென்னை மரத்தில் தீப்பிடித்ததாகவும் தொடர்ந்து மரத்தின் கீழிருந்த வீட்டினையும் மின்னல் தாக்கியதாகதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பஸ்தர்
அதேசமயம் பாரிய இடி மின்னல் ஏற்பட்ட வேளையில், தென்னை மரத்தின் கீழிருந்த படுக்கை அறையினை மின்னல் பலமாக தாக்கியதாகவும் அதன் மூலம் தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் குடும்பத்தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மின்னல் வீட்டினுள் ஊடுருவி மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் தாம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது கூரையின் பாகங்கள் தான் படுத்துறங்கிய கட்டிலில் பலமாக வீழ்ந்ததாகவும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மிகப் பிரகாசமான நீல நிற மின்னல் கீற்றுக்கள் உள்நுழைந்துள்ளதால் தாம் மிகுந்த அச்சத்திற்குள்ளானதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.