வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி
கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.
68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.

கோடிக்கணக்கில் பணம்?
இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.
ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.