மெழுகுவர்த்தியால் பறிபோன பெண்ணின் உயிர்
அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுகல பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் வயோதிபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (16) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுகல அயகம பிரதேசத்தில் வசிக்கும் 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்
அந்த பெண் உடல் நலக்குறைவால் ஒரே இடத்தில் தங்கியிருந்ததால் இரவு நேரத்தில் அவர் தங்கியிருந்த அறையில் வெளிச்சம் இல்லாததால் பிளாஸ்டிக் நாற்காலியில் மெழுகுவர்த்தியை வைத்து பற்ற வைத்துள்ளார்.
பிளாஸ்டிக் நாற்காலியில் தீப்பிடித்து அவர் உறங்கிக் கொண்டிருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்ததால் பெண் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.