வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.