யாழில் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் வீடு சென்றனர்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கபப்டவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இன்னிலையில் வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேசமயம் சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.