தனியார் துறையினர் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் !
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரி நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு ஒன்றியம் கோரியுள்ளது.
அந்தக் கடிதத்தில் வாழ்க்கையின் தேவைக்கு செலவு அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் நன்மைகளைப் பெற வேண்டும் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் உற்பத்தி செயல்முறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 80 சதவீதத்தை தனியார் துறையை உள்ளடக்கியது.அவர்களில் 60 சதவீதம் பேர் 25,000 ரூபாவுக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.
எனவே 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதன் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு இடையே உள்ள சிரமங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.