பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட 'லெட்டர் டிமான்ட்'... எதற்காக தெரியுமா?
இராஜாங்க அமைச்சர் லொஹானை கைது செய்யாவிட்டால் பொலிஸ்மா அதிபர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரை 7 நாட்களுக்குள் கைது செய்யாவிடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பொலிஸ் மா அதிபரிடம்' லெடர் டிமான்ட்' கோரிக்கை அனுப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்த சட்டத்தரணிகளான சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.