போர் காலத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்தோம்: சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதங்கம்
யாழ் - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் (20.08.2023) மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீட்டு விழா நிகழ்வு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றினார். மேற்படி அவர் தனது உரையில் மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலேயே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலில் எந்தவொரு விடயத்தையும் அமுல்படுத்த இலகுவாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு முன்னர் போர்காலத்தில் கூட சுதந்திரமாகவும் சமய கலாசார மொழி அடிப்படையில் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களினால் பின்தள்ளப்பட்டவர்களாக வழிநடத்தப்பட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒற்றுமையின்மை காரணமாகவே இவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் என பிரிவு ஏற்பட்டுள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.