என்னை விடுங்க....வீட்டுக்குப் போறேன்; கதறி அழுத வனிதா மகள் ஜோவிகா!
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்றி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் பிரபலான நிகழ்ச்சி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து 7 ஆவது சீசன் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருகின்ற நிலையில் , இல்லத்தில் நடிகை வனிதா மகள் ஜோவிகா, ”நான் வீட்டுக்கு போறேன் என் அம்மா கூட இருக்க விடுங்க” என கதறி அழும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.
ஜோவிகா முன்வைத்த விவாதங்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகா நுழைந்திருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் பிக் பாஸ் விளையாட்டை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு விளையாடினார் ஜோவிகா.
கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்! காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம்; எங்கு தெரியுமா?
குறிப்பாக, கல்வி குறித்து ஜோவிகா முன்வைத்த விவாதங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளானது.
அதன் பிறகு பிரதீப், விசித்ராவுடன் சண்டை போட்டதும் இவருக்கான அட்டென்ஷன் கிடைத்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் இல்லத்தில் சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருக்கிறார் ஜோவிகா.
இந்த நிலையில், “பிக் பாஸ் வீட்டில் இனி இருக்க முடியாது, என்னை வெளியே விட்டு விடுங்கள்” என ஜோவிகா கதறி அழுது கொண்டிருக்கும்படியான வீடியோ வெளியாகி இருக்கிறது.
”நான் என் அம்மாவோடு இருந்து கொள்கிறேன். என்னை விட்டு விடுங்கள்... கேங், கேங் என்று சொல்லி என்னை கடுப்பேத்தறாங்க” என ரவீனாவை பார்த்துக் கத்துகிறார் ஜோவிகா.
கடந்த சில நாட்களாக விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் சண்டை நடந்து வந்த நிலையில் தற்போது ஜோவிகாவுக்கும் ரவீனாவுக்கும் இடையில் சண்டை ஆரம்பித்துள்ளது.