13 பில்லியன் ரூபா வங்கி மோசடி ; 2024 முதல் கண்டுபிடிக்காதது ஏன்?

CID - Sri Lanka Police Sri Lanka Crime Money
By Sahana May 01, 2026 10:47 PM GMT
Report

தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

நிதியமைச்சு உதவி பணிப்பாளர் மரணம் ; நீதவான் விசாரணைக்கு பின் வெளிவந்த உண்மை

நிதியமைச்சு உதவி பணிப்பாளர் மரணம் ; நீதவான் விசாரணைக்கு பின் வெளிவந்த உண்மை

City & Local Guides இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது சந்தேகநபர் 2022 இல் வங்கியின் கடன் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த மோசடியை ஆரம்பித்துள்ளார்.

13 பில்லியன் ரூபா வங்கி மோசடி ; 2024 முதல் கண்டுபிடிக்காதது ஏன்? | 13 Billion Rupee Bank Fraud Discovered Until 2024

மோசடி செய்த பணத்தை 'பைனான்ஸ்' கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சியாக மாற்றி, மீண்டும் உள்நாட்டுப் பணமாகப் பெறத் திட்டமிட்டுள்ளார். சந்தேகநபர் தனது சகோதரரான இரண்டாவது சந்தேகநபருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

மற்றுமொரு நபரின் பெயரில் உள்ள பைனான்ஸ் கணக்கொன்றில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் 14 பேர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 4 அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இச்சம்பவத்தில் 2,619 தடவைகள் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் 10 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், 2024 முதல் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் வரை வங்கியின் கணக்காய்வுப் பிரிவு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர்.

யாழில் நடைபெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்

யாழில் நடைபெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்

மோசடி குறித்து வங்கியின் கணக்காய்வு அறிக்கைகளில் ஏதேனும் தகவல்கள் வெளிப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், தரவுகளை உள்ளீடு செய்த ஐந்து அதிகாரிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் அனைத்து கணக்காய்வு அறிக்கைகளையும் பரிசோதித்து, உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்ததா ? என விசாரணை செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் பணம் எவ்வாறு வங்கியிலிருந்து வெளியேறியது என்பது குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US