சிறுவனின் வயிற்றில் முளைத்த கால்கள் : வைத்தியர்களின் சாதனை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனின் வயிற்றை சுற்றி முளைத்திருந்த இரண்டு கால்களையும் சத்திரசிகிச்சையின் மூலம் இந்திய மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
அறுவை சிகிச்சை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கு பிறக்கும்போதே வயிற்றில் இரண்டு கால்கள் வளர்ந்திருந்தன. இதனால் பாடசாலை செல்ல முடியமல், சிறுவன் படிப்பையே நிறுத்திவிட்டதாகவும் இடை விலகியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூடுதலாக வளர்ந்த 2 கால்களை அகற்ற முடிவு செய்த மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்காக திட்டமிடப்பட்டு, கால்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இரட்டையர்கள் கருத்தரிக்கும் போது, ஒருவரின் உடல் வளர்ச்சி அடையாமல், அதன் உறுப்புகள் இன்னொருவரின் உடலுடன் இணைவது காரணமாகவே இவ்வாறு ஏற்படுவதாகவும் இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அரிய சம்பவம் என்று கூறப்படுகிறது.