உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை மற்றும் தலவாக்கலை நகரங்களில் உணவகங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளை நடத்திய கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21)ஆம் திகதி சனிக்கிழமை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது உணவகங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சரியான தரத்தில் இல்லாமை காரணமாகவும், உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதில்லை என பொது சகாதார அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.