யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்!
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்டன.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாயால் அதிகரிக்குமாறும், பதவி உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் , சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில் இணைக்குமாறும், 2016 இன் பின்பு அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரிகை விடுக்கப்பட்டுள்ளது.