இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை தொடர்பில் வெளியான தகவல் ; அமைச்சரின் தகவல்

Ampara Sri Lankan Peoples Sri Lanka Government Gazette
By Vironika Jul 12, 2026 10:11 AM GMT
Report

திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை தொடர்பில் வெளியான தகவல் ; அமைச்சரின் தகவல் | Latest Update On Irakkamam Tile Factory

 விஷேட வர்த்தமானி

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை உரையாற்றும் போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, வீரமுனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 25 விவசாயிகளின் 197 ஏக்கர் மற்றும் 3 ரூட் உறுதிக் காணி 1970 இல் இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அன்றைய அரசினால் விஷேட வர்த்தமானி மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த காணிகளை மீளப்பெற்றுக் கொள்ளவென இந்த விவசாயிகளும் அவர்களது பரம்பரையினரும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்து வருகின்றனர்.

தாய், தந்தையற்ற சிறுமிக்கு நடத்தப்பட்ட தகாத செயல் ; காதலனால் அரங்கேற்றப்பட்ட சம்பவம்

தாய், தந்தையற்ற சிறுமிக்கு நடத்தப்பட்ட தகாத செயல் ; காதலனால் அரங்கேற்றப்பட்ட சம்பவம்

கடந்த கால காணி அமைச்சர்கள், கைத்தொழில் அமைச்சு அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளை அவர்கள் பல தடவைகள் சந்தித்துள்ள போதிலும் இற்றை வரையும் அவர்களுக்கு குறித்த காணியோ அல்லது மாற்றுக் காணியோ அல்லது காணிக்குரிய நஷ்டஈடோ இற்றை வரையும் கிடைக்கப் பெறாதுள்ளது.

இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி குறித்த விவசாயிகளுக்கு காணியை மீளப் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அக் காணிக்குரிய நஷ்டஈட்டை வழங்கவோ அல்லது மாற்று காணி வழங்கவோ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் லால் காந்த, இவ்விடயம் தொடர்பில் காணி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை

இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையில் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம், கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர் தனியார் காணி உரிமையாளர்களுடன் பல கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதோடு காணியை அடையாளம் காணும் விடயங்களுக்கான செலவினை நில அளவையாளர் திணைக்களத்திற்கு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்தும் அந்த தீர்மானம் செயற்படுத்தப்படாமல் உள்ளதாக காணி ஆணையாளர் குறிப்பிட்டார்.

கதிர்காம பாதயாத்திரையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

கதிர்காம பாதயாத்திரையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

இதன்போது அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையின் காணி விவகாரம் தொடர்பில் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் லால் காந்தவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.

பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த பொலிஸ் அதிகாரி ; காதல் தொடர்பிற்காக வழங்கிய தண்டனை

பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த பொலிஸ் அதிகாரி ; காதல் தொடர்பிற்காக வழங்கிய தண்டனை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US