தாய், தந்தையற்ற சிறுமிக்கு நடத்தப்பட்ட தகாத செயல் ; காதலனால் அரங்கேற்றப்பட்ட சம்பவம்
15 வயது 4 மாத சிறுமி ஒருவர், சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கடந்த (11) ஆம் திகதி மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11-ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்தச் சிறுமியின் பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில், அவர் தனது பாட்டி மற்றும் சித்தியின் பராமரிப்பில் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு
அந்த இருவரும் சிறுமி குறித்து அதிக கவனம் செலுத்தாததால், அவர் அருகிலுள்ள ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். குறித்த வீட்டிற்கு தவறுதலாக அழைப்பை ஏற்படுத்திய நபருடன் சிறுமிக்குக் காதல் மலர்ந்துள்ளது
அந்த நபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவராவார். பின்னர், அந்த இளைஞன் குறித்த வீட்டிற்கு வந்து, அங்கு சிறுமியுடன் தகாத முறையில் நடந்துக்கொண்டதை அறிந்த சித்தி சிறுமியைத் திட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் திகதி, “நண்பர்களுடன் வெளியில் செல்கிறேன்” என்று பாட்டியிடம் கூறிவிட்டுச் சென்ற சிறுமி, காலி பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு காலி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த இளைஞன், சிறுமியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருடன் மீண்டும் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.
சிறுமி வீட்டிற்குத் திரும்பியதும், இது குறித்து அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.