மாதவிடாயால் பணிக்கு தாமதம் ; புகைப்படத்துடன் நிரூபிக்க சொன்னாதால் பல்கலைக்கழகத்தில் வெடித்த சர்ச்சை
அரியானா மாநிலத்தில் மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த சுகாதார ஊழியர்களை படம் பிடித்து நிரூபிக்க சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ரோத்தக் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 தூய்மை பணியாளர்கள் தாமதமாக வந்த நிலையில், மேற்பார்வையாளர்கள் பெண் ஊழியரை அழைத்து மாதவிடாய் இருப்பதை நிரூபிக்க புகைப்படம் எடுத்து வருமாறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணி நீக்கம்
மேலும் பணி நீக்கம் செய்து விடுவோம் என மிரட்டியதால், 2 பெண்கள் கழிப்பறைக்குச் சென்று புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இதர ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல்கலைக்கழகம் ஒரு மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்த நிலையில், அவர்கள் மீது ஒழுங்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.