யாழில் பெரும் தொகை கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (25) இரவு பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புலனாய்வுத் துறையினருக்கும், கடற்படையினருக்கும் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிஸாரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை வத்திராயன் பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.
இச்சுற்றிவளைப்பில் உதயகுமார் ஜெசிக்குமார் எனும் சந்தேக நபரும், 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளினையும், சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி உள்ளனர்.