லங்கா பிரீமியர் லீக்; புதிய இலட்சினை வெளியீடு
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் புதிய இலட்சினை இன்று வௌியிடப்பட்டது. உத்தியோகபூர்வ இலட்சினையை வடிவமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.
புதிய இலட்சினை
இதில், துணிச்சலைக் குறிக்கும் வகையில் ´சிங்கம்´ சின்னத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட இலச்சினை, எல்பிஎல்லின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் வசிக்கும் 24 வயதுடைய மியுலிக வீரமந்திரி என்ற இளைஞரால் குறித்த இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற LPL இலட்சினையை வடிவமைத்தவருக்கு 1000 அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் வழங்கியுள்ளது.
அதேவேளை லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாததம் 6 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.