பாலங்களிலிருந்து குப்பைகளை அகற்றும் கடற்படையினர்
வெள்ள அபாயத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிங் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில், தண்ணீர் சீராக செல்வதைத் தடுக்கும் வகையில் தேங்கியிருக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கபப்ட்டது.
அதன்படி அகலிய, வடுவெலிவிடிய, முல்கட, அவித்தாவ, தொடங்கொட ஆகிய பாலங்கள் அருகில் காலி அகலிய மற்றும் குருநாகல் மாணிங்கமுவ பாலங்களில் சிக்கியிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கையை கடற்படையினர் இன்று (04) மேற்கொண்டனர்.

பெருமளவான எச்சங்கள்
கடும் மழை காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்ததுடன், குப்பைகள், மரக்குச்சிகள், மூங்கில் புதர்கள் மற்றும் குப்பைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு தேங்கியுள்ளது.
இந்நிலையில் குவியும் குப்பைகளால் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

இதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் மேற்கு கடற்படை கட்டளை பிரிவினரால் விசேட சுழியோடி குழுக்களை ஈடுபடுத்தி பாலங்களில் தேங்கியிருந்த குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் புதர்கள் உட்பட பெருமளவான எச்சங்கள் அகற்றப்பட்டு நீர் சீரான முறையில் வெளியேறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.