MV INTEGRITY STAR கப்பல் குழுவை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையின் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நிற்கும்'எம்.வி. இன்டெக்ரிட்டி ஸ்டார்' (MV INTEGRITY STAR) என்ற வர்த்தக கப்பலின் பணிக்குழாமினரை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் 'சமுதுர' என்ற கப்பல் குறித்த கப்பலை நோக்கி புறப்பட்டு சென்றதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவலைப் பெற்றவுடன், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த மீட்பு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய, துருக்கி, மற்றும் அஸர்பைஜான் நாட்டவர்களைக் கொண்ட 14 பணிக்குழாமினர் அந்தக் கப்பலில் இருந்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்வதற்கும், அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கும் 'சமுதுர'என்ற கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.