இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் காலமானார்
முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தனது 79 ஆவது வயதில் இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார்.

முத்து சிவலிங்கம் 1994 முதல் 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் முத்து சிவலிங்கம் 2015 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் நாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.