பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ந்தும் பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 7:00 மணி முதல் நாளை மாலை 7:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் அமுலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை
அதன்படி பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஊவா பரணகம, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, புலத்கொஹுபிட்டிய,மாவனல்ல, ருவன்வெல்ல,அரநாயக்க, கேகாலை மற்றும் யட்டியந்தோட்டை மாத்தளை மாவட்டத்தின் யாதவத்த, அம்பாங்கங்கா கோரலே, உக்குவெல, பல்லேபொல மற்றும் ரத்தோட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, வலப்பனை மற்றும் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, எஹலியகொட, கலவானை, இரத்தினபுரி மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.