13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (05) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு நிலை 1 மற்றும் நிலை 2 ஆகிய இரண்டு மட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
நிலை 2 எச்சரிக்கை பதுளை மாவட்டத்தின் பசறை, கண்டி மாவட்டத்தின் மினிபே மற்றும் உடதும்பற, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கங்க கோரளை, மாத்தளை மற்றும் ரத்தோட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
நிலை 1 எச்சரிக்கை கண்டி மாவட்டத்தின் உடபலாத, கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய மற்றும் ரம்புக்கன, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, வெலிகெபொல மற்றும் அயகம ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் NBRI அறிவுறுத்தியுள்ளது.