கல்விச் சுற்றுலா சென்ற மாணவருக்கு நேர்ந்த பெரும் துயரம்
மொனராகலை பகுதியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று சபரகமுவ பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர், குருகல புனிதத் தலத்திற்குச் செல்லும் வழியில் சமனலவெவ அணையையும் பார்வையிடுவதற்காக சென்றுள்ளது.

தேடுதல் நடவடிக்கை
இதன்போது, மூன்று மாணவர்கள் நீராடும் நோக்கில் நீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென நீரின் வேகமான ஓட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த மாணவரின் சடலம் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பிபில, கிரியன்கும்புர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவரின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.