நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களின் பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்த அறிவித்தல் இன்று (14) மாலை 4:00 மணி முதல் நாளை (15) மாலை 4:00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை மட்டம் 2 - அதவதானம் (செம்மஞ்சள்)
நுவரெலியா மாவட்டத்தில் - மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டஹின்ன இரத்தினபுரி மாவட்டத்தில் - பலங்கொடை மற்றும் கொாலொன்ன.

எச்சரிக்கை மட்டம் 1 - விழிப்புடன் (மஞ்சள்)
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - கட்டுவான மற்றும் வலஸ்முல்ல. களுத்துறை மாவட்டத்தில் - பாலிந்தநுவர, வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்ஹல.
கண்டி மாவட்டத்தில் - தும்பனே மற்றும் ஹதரலியத்த.
கேகாலை மாவட்டத்தில் - கேகாலை, ரம்புக்கனை, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, வரகாப்பொல, ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க.
மாத்தளை மாவட்டத்தில் - அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை மற்றும் மாத்தளை.
மாத்தறை மாவட்டத்தில் - முலட்டியன, அத்துரலிய மற்றும் பஸ்கொட.
இரத்தினபுரி மாவட்டத்தில் - களவானை, வெலிகேபொல, அயகம, எஹெலியகொட, நிவித்திகலை, இரத்தினபுரி, இம்புல்பே, குருவிட்ட மற்றும் எலபாத.
பலத்த மழை காரணமாக மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து தீவிர அவதானத்துடன் இருக்குமாறும், அவசர காலத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.