பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
தற்போது நிலவும் மழை உடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (31) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கும்,
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, ஓபநாயக்க, எலபாத்த, குருவிட்ட, பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,
கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் யடிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புளத்கோபிட்டிய மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.